Department Of National Botanic Gardens

தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்

You are here:முதப்பு arrow எம்மைப் பற்றி arrow பணியாட்தொகுதி arrow பகுப்பாய்வூ
பகுப்பாய்வூ
தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம
 
 

அதன் பின்னர் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளின் பிரதிபலனாக பொருளாதார மற்றும் பெருந்தோட்டப் பயிர் அபிவிருத்தி‚ விவசாயத் திணைக்களம்(1912)‚ வன பாதுகாப்புத் திணைக்களம்(1887) போன்ற அரச திணைக்களங்கள் மற்றும் தேயிலை‚ இறப்பர் பெருந்தோட்டப் பயிர் அபிவிருத்திக்கான நிறுவனங்கள் தோற்றம் பெற்றமையாகும்.

912 ஆம் ஆண்டிலே விவசாயத் திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர் தாவரவியல் பூங்காக்கள் அந்த திணைக்களத்தின் கீழ் ஒரு பிரிவாக செயற்பட்டது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டிலே தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் உருவாக்கப்பட்டது.

 
 நோக்கு
வெப்பமண்டல நாடொன்றிலுள்ள விலைமதிப்பிட முடியாத பெறுமதிமிக்க தாவரவியற் பூங்காவாக மாற்றியமைத்தல். மற்றும் அதனூடாக இலங்கையின் தாவர வர்க்கங்களை பாதுகாப்பதற்கான பிரதானமான நிறுவனமாக மாறுதலும்‚ அவ்வாறே நாட்டின் பொருளாதார விருத்திக்கு உச்சளவில் பங்களிப்புச் செய்வதுமாகும்.
 
  செயற்பணி
எமது செயற்பணியாக அமைவது‚ இயற்கையான‚ செயற்கையான சூழலினுள் அமைந்துள்ள தாவர வளங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்‚ நிரந்தரமாக பாதுகாப்பதற்கும்‚ மதிப்பதற்கும் தேவையான உயர் வாய்ப்பினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.
   
தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிகள
1. இலங்கையில் காணப்படும் பல்லினத் தாவர வகைகளை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு உபாயங்களை திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல்.
2. கல்விசார் மற்றும் தொடர்பாடல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி இலங்கையின் தாவரங்கள்‚ தாவரங்களுடன் தொடர்புடைய கைத்தொழில்கள் பற்றிய சரியான தகவல்கள் மற்றும் தொழிநுட்ப அறிவினை பரப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லல்.
3. இலங்கையினுள் பூக்கள் பயிர் செய்கை கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் தொழிநுட்ப முறைகளை கையாளுதல்.
4. தேசிய தாவரவியல் பூங்கர முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை உயர் தரத்தின் மீது பேணிவரல்.
5. பொருத்தமான இடங்களில் தாவரவியல் பூங்காக்களை புதிதாக அமைப்பதற்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்தல்.
6. இலங்கையிலே கண்கவர் தாவரவியல் விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்துவதற்குத் தேவையான ஆராய்ச்சிகள் மற்றும் கலைரீதியான நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்துதல்.
7. வரலாற்று முக்கியத்துவமிக்க இலங்கைத் தாவர வகைகளை பாதுகாப்பதற்குத் தேவையான கலைரீதியான ஆலோசனைகளை வழங்குதல்.
     
மேற்படி விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு துணை புரியும் நிறுவனங்கள் மற்றும் பணியகங்கள் பின்வருமாறு
1. பேராதனை றோயல் தாவரவியல் பூங்கா.
2. ஹக்கல தாவரவியல் பூங்கா.
3. கம்பஹர ஹெனரத் கொட தாவரவியல் பூங்கா.
4. தேசிய தாவர நிலையம்.
5. மூலிகை பூங்கா‚ கனேவத்த.
6. உலர்வலய தாவரவியல் பூங்கர மிரிஜ்ஜவில‚ அம்பாந்தோட்டை. (நிர்மாணிக்கப்பட்டு வரப்படுகின்றது)
7. சீத்தாவாக்க ஈரவலய தாவரவியல் பூங்கா‚ இலுக்கோவிட்ட‚ அவிசாவலை. (நிர்மானிக்கப்பட்டு வருகின்றது)
8. பூ செய்கை ஆராய்ச்சி‚ அபிவிருத்திப் பிரிவு.
9. கற்கை நிலையம்.
10. பூங்கர உதவி அலுவலகம்‚ நாராஹேன்பிட்டி.
11. ஹரித்த பியச‚ மீகலேவ.
12. சனாதிபதி மாளிகை பூங்கா‚ கொழும்பு.
13. அலரி மாளிகை பூங்கா‚ கொழும்பு.
14. பிரதம அமைச்சரின் அலுவலக பூங்கா‚ கொழும்பு.
15. சனாதிபதி மாளிகை பூங்கர - கண்டி.
16. சனாதிபதி மாளிகை பூங்கர - நுவரெலியா.
17. பிரதமரின் இல்லப் பூங்கா‚ கொழும்பு.
18. சனாதிபதி மாளிகை பூங்கர - அநுராதபுரம்.
19. ரொரின்டன் செடிகள் நாற்றுமேடை (சுவஹஸ் மல் செவன)‚ கொழும்பு.
20. பொதுநலவாய நாடுகளின் யுத்த மயானம்‚ பிட்டகந்த‚ கண்டி.
21. பொதுநலவாய நாடுகளின் யுத்த மயானம்‚ பிட்டகந்த‚ பொரலை.
22. பொதுநலவாய நாடுகளின் யுத்த மயானம்‚ பிட்டகந்த‚ ஜாவத்தை.
23. பொதுநலவாய நாடுகளின் யுத்த மயானம்‚ பிட்டகந்த‚ நிலாவெளி‚ திருகோணமலை.
   
அநுராதபுரத்தின் ஸ்ரீ மகாபோதியின் சுகாதார நிலையை சிறப்பாக பேணி வருவதும் தேசிய தாவரவியல் பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றுமொரு முக்கியமான பொறுப்பாகும்.