ROYAL BOTANIC GARDENS - PERADENIYA - பார்வையாளர்களுக்கான தகவல்கள்
 
பார்வையாளர்களுக்கான தகவல்கள்
பூங்கர ஒழுங்கு விதிகள்
  பூங்கர ஒழுங்கு விதிகள்
 
1. அனுமதியின்றி வாகனங்களை உள்ளே கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
   
2. வழங்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் குப்பை கூலங்களை போடவும். அல்லது மீள்சுற்றுக்காக வீட்டிற்கு கொண்டு செல்லவும்.
   
3. தயவு செய்து மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் அல்லது முறையற்ற விதத்தில்‚ அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளவும்.
   
4. இசைக் கருவிகள்‚ வானொலிப் பெட்டிகள்‚ இலத்திரனியல் உபகரணங்கள்‚ ஆயுதங்கள் என்பன கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பூ பரித்தல்‚ மரத் தண்டு வெட்டுதல்‚ நாற்றுக்களை பிடுங்குதல் என்பன செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
   
5. விலங்குகள்‚ நாற்றுக்கள்‚ தாவரங்கள்‚ பூ நாற்றுமேடைகள்‚ ஒட்டப்பட்டுள்ள பொருட்பெயர்கள்‚ ஆசனங்கள் போன்ற பூங்காவிற்கு சொந்தமான சொத்துக்கள் எதனையும் சேதப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
   
   
6. மதுபானங்கள் அல்லது வேறு போதைப் பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்காகவேர அல்லது அவற்றை பாவித்து விட்டு உள்ளே செல்வதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது.
 
   
7. காற்பந்து‚ ரகர்‚ ஹொக்கீ‚ கிரிக்கட்‚ கரப்பந்து அல்லது பூங்கர அதிகாரியினால் தடைசெய்யப்பட்டுள்ள வேறு எந்தவொரு விளையாட்டையும் விளையாடக் கூடாது.
 
   
8. அனுமதியின்றி பூங்காவினுள்ளே ஏதேனும் பொருட்களை விற்பனை செய்வது அல்லது விற்பனைக்காக பார்வைக்கு வைப்பது என்பன சட்டவிரோதமானதாகும்.
 
   
   
 
 
 
பார்வையாளர்களுக்கான வசதிகள்
  பார்வையிட வருபவர்களுக்காக பேராதனை தாவரவியல் பூங்காவில் பின்வரும் வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
 
  சக்கர நாற்காலி
 

அங்கவீனர்களுக்காக சக்கர நாற்காலிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தயவு செய்து பிரதான நுழைவாயிலில் சக்கர நாற்காலி பற்றி வினவவும்.

 
  உணவு‚ பானம் வகைகள்
 
மு.ப. 10.00 முதல் பி.ப. 5.30 மணிவரையில் சிற்றுண்டிச்சாலை நாளாந்தம் திறந்திருக்கும். சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள இடத்தை பூங்காவின் வரைபடத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
 
  ஆசன வசதிகள்
 

ஓய்வு எடுப்பதற்காக கோடைக்கால இல்லங்கள்‚ ஆசனங்கள் என்பன பூங்காவின் நாலாபுறமும் பொருத்தப்பட்டுள்ளன.

 
  மலசலகூட வசதிகளும்‚ குடிநீர் வசதிகளும்
 

பூங்காவின் உள்ளே மலசலகூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. றோயல் தாவரவியல் பூங்கர வரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் மலசலகூட வசதிகள் உள்ள இடங்களை அடையாளம்காண முடியும்.

 
 
 
 
பார்வையிட
 பார்வையிட வருபவர்களுக்கான தகவல்கள்
விரிவாக்கப்பட்ட படத்தை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்.

  பேராதனை றோயல் தாவரவியல் பூங்காவானது கண்டி-கொழும்பு வீதிக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.
அதை மிகவும் இலகுவில் வந்தடைய முடியும்.
 
   
  கொழும்பிலிருந்து தூரம் 110 கி. மீ.
 

கண்டியிலிருந்து தூரம் 6.4 கி. மீ.

  சரசவி உயன புகையிரத நிலையத்திலிருந்து 20 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரமாகும்.
   
   
 திறந்திருக்கும் நேரங்கள்
  றோயல் தாவரவியல் பூங்கர மு.ப. 7.30 முதல் பி.ப 5.30 வரை நாளாந்தம் திறந்திருக்கும்.
  நுழைவுச் சீட்டு கருமபீடம் மற்றும் ஓகிட் கூடம் என்பன பி.ப. 5.00 மணிக்கு மூடப்படும்.
   
 நுழைவுக் கட்டணம்
  ஊள்ளுர் சுற்றுலாப் பயணிகளுக்கு சகாய விலை அறவிடப்படும்.
  ரீ. பீ. ஏ
   
  உள்நாட்டவர் அல்லாதவர்களுக்கு
  வயதுவந்தவர்களுக்கு ரூ. 600.00
  >சிறுவர்களுக்கு (வயது 5-12 இடைப்பட்ட) ரூ. 300.00
  பாடசாலை மாணவர்கள் ரூ. 300.00
  நுழைவுச் சீட்டுக்கள் பெற்றுக்கொண்ட நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
     
 
 
 
 
 
                              பதிப்புரிமை © 2008-  2010 றோயல் தாவறவியல் பூங்காக்கள் பேராதனை.  நிர்மானிப்பு பூரனீ இன்ஸ்பிரேஷன்