ROYAL BOTANIC GARDENS - PERADENIYA - இலங்கையின்
 
இலங்கையின்
இலங்கையின் தாவரவியல் பூங்கர பற்றிய வரலாற்றுச் சுருக்கம்
றோயல் தாவரவியல் பூங்கர பற்றிய வரலாறு‚ ஐஐஐ ஆவது விக்கிரமபாகு மன்னன் சிங்காசனம் கிடைக்கப்பெற்று தனது அரச மாளிகையை பேராதனையில் மகாவலி கங்கைக்கு அருகாமையில் அமைத்துக் கொண்ட 1371 ஆம் ஆண்டு வரை முன்னோக்கிச் செல்கின்றது. பின்னர்‚ கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் ஆட்சிக் காலத்தினுள்‚ (1747 முதல் 1780 வரையில்)‚ இது முடிக்குரிய பூங்காவாகக் காணப்பட்டதுடன்‚ ராஜாதி இராஜசிங்க மன்னன் தமது ஆட்சிக் காலத்தில்‚ (1780 முதல் 1798 வரையில்)‚ தற்காலிக வாசஸ்தலமொன்றை இங்கு அமைத்து அதில் வசித்து வந்தார்.
 
விமலதர்ம மன்னனின் ஆட்சிக் காலத்திலே இந்த இடத்தில் ஒரு விஹாரையும் தாதுகர்ப்பம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் ராஜாதி இராஜசிங்க மன்னன் அவற்றை புனரமைத்தார். கண்டியை ஆக்கிரமித்ததன் பின்னர் ஆங்கிலேயர் இந்த விஹாரையையும்‚ தாதுகர்ப்பத்தையும் அழித்தனர். இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் போர்த்துக்கேயர்களுக்குமிடையில் நடைபெற்ற வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற கன்னொருவை போர் இந்த பூங்காவின் வடக்குப் பிரதேசத்தில் நதிக்கு அக்கரையிலேயே இடம்பெற்றது. கண்டி இராசதானியை முழுமையாகக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்‚ அதாவது 1821 ஆம் ஆண்டிலே அலெக்ஸான்டர் மூன் அவர்கள் இந்த பூங்காவை ஒழுங்கமைக்கும் வரையில் மதத் தலைவர் ஒருவர் இங்கு வசித்துவந்தார்.

1810 ஆம் ஆண்டிலே சேர் ஜோசப் பென்க்ஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிவ் எனும் பெயரில் பூங்காவொன்று கொம்பனித்தெருவில் திறந்து வைக்கப்பட்டதுடன்‚ அதன் பொறுப்பாளராக வில்லியம் கர் அவர்கள் நியமிக்கப்பட்டார். கொம்பனித்தெரு பூங்காவில் பயிரிடக் கூடிய அளவிலும் பார்க்க கூடுதலான அளவு பொருளாதார பெறுமதிமிக்க மரங்கள்‚ செடிகள் என்பவற்றை பயிரிடக் கூடியதாக இருந்தமையால் 1813 ஆம் ஆண்டு இந்த பூங்கர களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. கர் அவர்கள் 1814 ஆம் ஆண்டு காலஞ் சென்றதுடன் அவரது பதிலாளான அலெக்ஸான்டர் மூன் அவர்களின் பொறுப்பின் கீழ் இந்தப் பூங்காவானது 1821 ஆம் ஆண்டு பேராதனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. உத்தேச தாவரவியல் பூங்காவிற்கான மிகவும் பெருத்தமான மற்றும் தகுதியான இடமாக பேராதனை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமையால் பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. களுத்துறை பூங்காவில் காணப்பட்ட மிகவும் அரிதான பெறுமதிமிக்க வெளிநாட்டு தாவர செடி வகைகளை பேராதனை பூங்காவிற்கு கொண்டு செல்லும் பணிகள் 1843 ஆம் ஆண்டு வரையில் பூங்காவின் நிருவாகியாக நியமிக்கப்பட்டவரால் மேற்கொள்ளப்பட்டது. பேராதனை றோயல் தாவரவியல் பூங்காவானது மூன் அவர்கள் நிருவகித்து வந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது என கூறக்கூடியதாக இருந்தபோதிலும் கூட‚ முதல் முதலில் சுத்தம் செய்து இந்தப் பூங்காவின் தென்மேற்குப் பகுதியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அங்கும் கூட கோப்பி‚ கறுவர என்பனவே அதிகமாக பயிரிடப்பட்டன. மூன் அவர்களினால் 1824 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டலொக் ஒப் சிலோன் ப்ளான்ட்ஸ் எனும் நூலில் 1127 தாவர இனங்களின் தாவரவியல் பெயர்களும் உள்நாட்டுப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 1844 ஆம் ஆண்டிலே ஜோர்ஜ் காடனர் அவர்களின் நியமனத்தின் பின்னர் இந்த நிறுவனமானது மிகவும் சுயாதீனமான தொழிற்பாட்டுடனும்‚ பயன்வாய்ந்த நிலைத்திருக்கும் தன்மையுடனும் அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன்‚ அன்று முதல் இது வரையில் அந்த நிலையானது பேணிவரப்படுகின்றது. 147 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த பூங்காவை காடினர் அவர்கள் பெறுப்பேற்கும்போது 40 ஏக்கர் மட்டுமே பயிரிடப்பட்டிருந்தது. இப்பூமியிலிருந்து பெறப்பட்ட பிரதான பயனாக‚ கண்டி அரச அதிபர் அவர்களினால் விற்பனைக்காக பலா‚ தேங்காய் மற்றும் மரக்கறி என்பன பயிரிட்டமையைக் குறிப்பிடலாம். பூங்காவின் தரத்தை மேம்படுத்துவதற்காக காடினர் அவர்கள் முக்கியமான மாற்றங்கள் பலவற்றை மேற்கொண்டார். எனினும் அவரது முக்கிய பணியாக அமைந்தது யாதெனில் நாடு முழுவதிலும் சுற்றித் திரிந்து தாவரச் செடிகளை சேகரிப்பதும் அவற்றை முறையாக ஒழுங்குபடுத்துவதுமாகும். திரு. காடினர் அவர்கள் 1849 ஆம் ஆண்டு நுவரெலியாவில் காலம் சென்றதுடன் அவரது இடத்திற்கு காலநிதி த்வேட்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பூங்காவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் சிறந்த முறையில் நிர்வகித்ததுடன் நாட்டிலுள்ள தாவர இனங்கள் பற்றிய எமது அறிவினையும் விருத்தி செய்தார். இந்த காலத்தினுள் பேராதனைத் தாவரவியல் பூங்காவானது சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்றது. சிங்கோனர செய்கையை நாட்டிலே அறிமுகப்படுத்துவதற்காக 1861 ஆம் ஆண்டிலே ஹக்கலை பூங்காவும் இறப்பரை அறிமுகப்படுத்துவதற்காக 1876 ஆம் ஆண்டில் கம்பஹர (ஹெனரத்கொடை) தாவரவியல் பூங்காவும் ஆரம்பிக்கப்பட்டன.

திரு. த்வேட்ஸ் அவர்களின் பதிலாளான மருத்துவர் ஹென்ரி ரைமன் அவர்களது மேற்பார்வை மற்றும் சிறந்த நிருவாகத்தின் கீழ் பூங்காவின் அலங்காரம்‚ பயன்பாட்டுத் தன்மை என்பன குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்தன. அவர் இந்த இடத்தில் பொருளாதார தாவரவியல் அருங்காட்சியகமொன்றை ஆரம்பித்ததுடன் பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் கிளை பூங்காக்களும் திறக்கப்பட்டன. இலங்கையின் தாவர வேளாண்மைக் குணம் பற்றிய நூலை அவர் ஆரம்பித்த போதிலும் அவரது மறைவின் பின்னர் 1896 ஆம் ஆண்டிலே சேர் ஜோசப் டீ. ஹூகர் அவர்கள் அதனை முடித்து வைத்தார். 1896 ஆம் ஆண்டிலே ரைமன் அவர்களின் பதிலாளாக கலாநிதி ஜே. சீ விலிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் அன்று முதல் புதிய விஞ்ஞான மன்றமொன்றின் கீழ் பணிகள் விரிவுபடுத்தப்பட்டன. ஆரம்ப ஆண்டுகளிலே மன்றத்தின் பணிகள் பயன்வாய்ந்த மற்றும் அலங்கார தாவர இனங்களை அறிமுகம் செய்தமையும் அவற்றை சூழலிற்கு பழக்கப்படுத்துவதையுமே மையமாகக் கொண்டு காணப்பட்டது. எனினும் அதன் பின்னர் பொருளாதார மற்றும் விவசாய ரீதியில் பெறுமதிமிக்க தாவரங்களை முன்னேற்றும் பணிகள் அதிகரித்தன. 1912 ஆம் ஆண்டாகும் போது இந்நிலையானது விவசாயத் திணைக்களத்தை நிறுவும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது. 1895 ஆம் ஆண்டிலே பூங்கர பாதுகாவலராக நியமிக்கப்பட்ட திரு. எச். எப். மக்மிலன் அவர்கள் 1912 ஆம் ஆண்டிலே தாவரவியல் பூங்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். 1914 ஆம் ஆண்டிலே பூங்காவின் பொறுப்பாளராக ரீ. எச். பார்சன்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். மக்மிலன் அவர்கள் பதவிவகித்த காலத்தினுள் பூங்காவை அபிவிருத்தி செய்து விஸ்தரித்ததுடன் அவரது மிகவும் முக்கியமான நூலான யு ர்யனெ டீழழம ழக வுசழிஉையட ிடயவெபைெ யனெ புயசனநசெைபெ புத்தகம் வெளியிடப்பட்டது. திரு. மக்மிலன் அவர்கள் 1925 ஆம் ஆண்டிலே ஓய்வு பெற்றதுடன் பார்சன்ஸ் அவர்கள் 1945 ஆம் ஆண்டு வரையும் பூங்காவின் பொறுப்பாளராக பணியாற்றினார். 1945 ஆம் ஆண்டிலே பூங்கர பொறுப்பாளரால் நியமிக்கப்பட்ட திரு. டீ. என். ஏ. ஜயவீர அவர்கள் தாவர முளைகள் மற்றும் இலங்கையில் ஓகிட் தாவரம் பற்றிய எமது அறிவினை விருத்தி செய்வதற்கு பாரியளவில் பங்களிப்புச் செய்தார். 1971 ஆம் ஆண்டிலே பூங்கர பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட திரு. டீ. ரீ. ஏக்கநாயக்க அவர்கள் இலங்கையின் மர செய்கை‚ பூ செய்கை என்பவற்றின் முன்னோடியாவார். தேசிய தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக திரு. டீ. பீ. சுமித்ரஆரச்சி அவர்களால் தாவரவியல் பூங்காவின் தரத்தை மேம்படுத்துவதற்காக பெரிதும் உழைத்ததுடன் 1998 ஆம் ஆண்டிலே தமது பதவியிலிருந்து விலகும் வரையில் மிகவும் பயன்வாய்ந்த ஆராய்ச்சி செயற்றிட்டங்களை மேற்கொண்டார்.


கலாநிதி திரு. டீ. எஸ். ஏ. விஜேசுந்தர அவர்கள் 1998 ஆம் ஆண்டிலே பணிப்பாளராக பதவியேற்றதுடன் 2006 ஆகஸ்ட் வரையில் அப்பதவியில் பணியாற்றினார். 2006 ஆகஸ்ட் மாதம் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் நிறுவப்பட்டதுடன் கலாநிதி விஜேசுந்தர அவர்கள் அதன் முதலாவது பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். மிரிஜ்ஜவிலை (அம்பாந்தோட்டைக்கு அருகாமையில்) புதிய தாவரவியல் பூங்காவொன்றை அமைப்பதற்கான பணிகள் 2006 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டதுடன் அது சுதந்திரத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தாவரவியல் பூங்காவாகும். இலங்கையின் உலர் வலயத்திற்கும்‚ அரை வெப்ப உலர் வலயத்திற்கும் தனிச் சிறப்புமிக்க தாவரங்களை பாதுகாப்பதனை நோக்காகக் கொண்டு 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட இது இலங்கையிலேயே மிகப்பெரிய தாவரவியல் பூங்காவாகும். ஈரவலய தாவரங்களை பாதுகாப்பதற்காக மற்றுமொரு தாவரவியல் பூங்காவொன்று அவிசாவலை பிரதேசத்தில் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் மேலும் 05 தாவரவியல் பூங்காக்களை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்படுகின்றது. தாவரவியல் பூங்காக்கள்‚ தேசிய தாவர களஞ்சியம்‚ மூலிகை நாற்று பூங்காக்கள்‚ அதிமேதகு சனாதிபதி அவர்களின் மற்றும் கெளரவ பிரதம அமைச்சர் அவர்களின் வாசஸ்தலங்கள்‚ அலுவலகங்களுக்குரிய பூங்காக்கள்‚ பெதுநலவாய நாடுகளின் படைவீரர்களுக்குரிய மயானங்கள்‚ அநுராதபுர ஸ்ரீ மகர போதி‚ மற்றும் ஏனைய வரலாற்று முக்கியத்துவமிக்க தாவரங்கள்‚ என்பவற்றை பராமரித்தலும் பாதுகாத்தலும் உட்பட அவற்றிற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பது தாவரவியல் பூங்காக்கள் திணைக்களமாகும்.
 
 
                              பதிப்புரிமை © 2008-  2010 றோயல் தாவறவியல் பூங்காக்கள் பேராதனை.  நிர்மானிப்பு பூரனீ இன்ஸ்பிரேஷன்